திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை கொன்ற மகன்.. ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்
நாமக்கல் அருகே திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்: நமாக்கல் அருகே திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் வீசாணம் ஒட்டக்குளம் புதூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் 28 வயதான மகன் சசிக்குமார். இவர் தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி தனது தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு சசிக்குமார் தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி தந்தை பழனிச்சாமியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பழனிச்சாமி பெயரில் உள்ள நிலத்தை தன்பெயரில் மாற்றித்தரும்படியும் அவர் கேட்டுள்ளார்.
இதற்கு பழனிச்சாமி மறுத்ததால் ஆத்திரமடைந்த சசிக்குமார் கொடுவாலால் பழனிச்சாமியை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த பழனிச்சாமி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக சசிக்குமாரை கைதுசெய்த போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலை நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி இளவழகன், குற்றம்சாட்டப்பட்ட சசிக்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இதை தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிக்குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications