“கொடநாடு எஸ்டேட் என்னுடையது... பால் காய்ச்சணும்”... உரிமை கொண்டாடிய பெண்ணால் பரபரப்பு
கோவை: தமிழக முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது சென்று ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் தன்னுடையது என பெண் ஒருவர் எஸ்டேட் நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் அமைந்துள்ளது கொடநாடு எஸ்டேட். தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சொந்தமான இந்த எஸ்டேட்டில் அவ்வப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்று ஓய்வு எடுத்துச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று கொடநாடு எஸ்டேட்டின் 4வது கேட் வாசலில் பெண் ஒருவர் அங்கிருந்த காவலாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதாவது, "கொடநாடு எஸ்டேட் எனக்கு சொந்தமானது. அதை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளது. இதற்கான பத்திரங்கள் எனது பெயரில்தான் உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை ஆடி மாதம் பிறப்பதால் அதற்கு முன்பாக பால் காய்ச்சி குடியேற வேண்டும்'' என அவர் கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவலாளி, இது தொடர்பாக எஸ்டேட் நிர்வாகிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து கோத்தகிரி போலீசாருக்கு இது தொடர்பாக எஸ்டேட் நிர்வாகத்தினர் தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார், இரவு நேரம் என்பதால் அப்பெண்ணை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அப்பெண் கோவை, உடையாம்பாளையத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்பது தெரியவந்தது. மேலும், உமா மகேஸ்வரி மனநிலை பாதிக்கப்பட்டவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications