ஒரு தலைகாதல்.. செல்போனுக்காக தற்கொலை செய்த நித்யஸ்ரீயுடன் உடன்கட்டை ஏறினாரா இளைஞர்?

Subscribe to Oneindia Tamil

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே காணாமல் போன வாலிபர் ஒருவர் ஒருதலை காதலால் , பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி நித்யஸ்ரீயுடன் உடன்கட்டை ஏறியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டு நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யஸ்ரீ. இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு நர்சிங் படித்து வந்தார்.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடி உள்ளதால் தற்போது ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இவரது தந்தை ஆறுமுகம் மூன்று மகள்களுக்கும் ஒரு செல்போனை வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஆன்லைன் வகுப்பு

ஆன்லைன் வகுப்பு

அதே செல்போனில் நித்யஸ்ரீ மற்றும் அவரது இரு சகோதரிகளும் சேர்ந்து ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டு கல்வி பயில வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். ஆனால் மூன்று பேருக்கும் ஒரே நேரத்தில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுவதால் மூன்று பேரும் ஆன்லைன் வகுப்பு ஒரே நேரத்தில் படிக்க முடியாத நிலை இருந்து வந்தது.

ஒரு தலை காதல்

ஒரு தலை காதல்

இதனால் மனமுடைந்த நித்யஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்து எடுத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே நித்யஸ்ரீயை அருகிலுள்ள ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமு, ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

 எரித்துக் கொண்ட இளைஞர்

எரித்துக் கொண்ட இளைஞர்

இந்த நிலையில் நித்யஸ்ரீ உயிரிழந்த நிலையில் அவரது உடல் அங்கு உள்ள மயான கொட்டகையில் எரிக்கப்பட்டது. இதை அறிந்த ராமு மயான கொட்டகை அமைந்துள்ள பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது நித்யஸ்ரீயின் உடல் எரிந்து கொண்டிருந்த நிலையில் ராமு அதே தீயில் குதித்து எரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

வழக்கு பதிவு

வழக்கு பதிவு

ராமு வீட்டிற்கு வராததால் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் அவரை காணவில்லை என திருநாவலூர் காவல் நிலையத்தில் அவரது தந்தை முருகன் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் நித்யஸ்ரீயுடன் சேர்ந்து உடன்கட்டை ஏறியது ராமுதானா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வந்தனர்.

பரபரப்பு

பரபரப்பு

இந்த நிலையில் புதன்கிழமை மாலை விழுப்புரம் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மயான கொட்டகையில் கிடந்த எலும்புகளைக் கொண்டு, எரிந்தது ராமுதானா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு தலைக் காதலுக்காக இளைஞர் ஒருவர் உடன்கட்டை ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+