நெல்லை அருகே தனியார் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு.. பேருந்து சூறை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு
நெல்லை அருகே தனியார் பேருந்து மோதி பெண் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பேருந்தை சூறையாடினர்.
நெல்லை: நெல்லை அருகே தனியார் பேருந்து மோதி பெண் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பேருந்தை சூறையாடினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த முருகையா. இவரது மனைவி கமலம் கோவில்பட்டி செல்வதற்காக செங்கோட்டை-பண்பொழி சாலையை கடந்துள்ளார்.

அப்போது செங்கோட்டையிலிருந்து கோவில்பட்டி செல்லும் தனியார் பேருந்து வேகமாக வந்துள்ளது. இதில் எதிர்பாராத விதமாக பேருந்து கமலம் மீது மோதியது. இதில் கமலம் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் திரண்டுவந்து ஆத்திரத்தில் பேருந்தின் முன்பகுதி சைடு ஆகிய கண்ணாடிகளை நொறுக்கி சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.

தொடர்ந்து சாலையில் கமலத்தின் உடலோடு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்தவழியே போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications