காவேரிக்கு விரைந்த நடிகர் விவேக்.. கருணாநிதி நலம் குறித்து கேட்டறிந்தார்
கருணாநிதி மீண்டும் தமிழுக்கு தொண்டு ஆற்றுவார் என விவேக் தெரிவித்துள்ளார்.
சென்னை: தீவிர சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் விவேக் இன்று மருத்துவமனை சென்று விவரம் கேட்டறிந்தார்.
நடிகர் விவேக், திரைப்பட நடிகராக மட்டுமின்றி தன் சமூக அக்கறையினை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருபவர். அது, "காவிரி தாயே என்னை மன்னிப்பாயா" என்று விவசாயிகளுக்கு ஆதரவு கரம் நீட்டும் வார்த்தைகளில் ஆகட்டும், பிராண வாயு தந்து வாழ்நாள் முழுவதும் நம்மை காப்பாற்றும் மரங்களை வளர்ப்போம் என்று கூறி மரக்கன்றுகளை ஓயாமல் நட்டு வருவதிலாகட்டும் அது தென்பட்டு போகிறது.

அதேபோல திமுக தலைவர் மீது அவருக்கு அபரிமிதமான மரியாதையும், உயரிய மதிப்பும் வைத்திருப்பவர் விவேக். அது பல கலைத்துறை நிகழ்ச்சியிலே அதனை விவேக் வெளிப்படுத்தி இருப்பார். அதேபோல கருணாநிதிக்கும் விவேக் மீது தனி பாசம் உண்டு. விவேக்கின் மகன் பிரசன்னகுமார் திடீரென்று மறைந்தபோதுகூட, கருணாநிதி இரங்கல் கடிதம் எழுதி தனது வருத்தத்தை தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கூட, நடிகர் விவேக், "தீயைத் தாண்டியவர், தென்றலைத் தீண்டியவர் விரைவில் நலம் பெற வேண்டும்" என டுவிட்டரில் தனது வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு நடிகர் விவேக் சென்றார். அப்போது கருணாநிதியின் உடல்நலம் குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். வெளியில் வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்பி, தமிழுக்கு தொண்டு ஆற்றுவார் என கூறினார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications