சென்னையில் ஜெ.: கொட்டும் மழையில் பூமழை தூவி மனித சங்கிலியாக நின்று வரவேற்ற அதிமுக தொண்டர்கள்!!
சென்னை: பெங்களூர் சிறையில் இருந்து சென்னைக்கு வந்த ஜெயலலிதாவை கொட்டும் மழை என்றும் பாராமல் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து போயஸ்கார்டன் இல்லம் வரை பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு நின்று எழுச்சி மிக்க வரவேற்பு கொடுத்தனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ராஹார சிறையில் இருந்து இன்று விடுதலை ஆனார். சிறை வாசலில் இருந்து பெங்களூர் விமான நிலையம் வரை வழிநெடுக அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.

சென்னையில் வரவேற்பு
தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து இறங்கியதும் ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். புரட்சித்தலைவி அம்மா வாழ்க என்று முழக்கமிட்டனர். அமைச்சர் டி.எம்.கே.சின்னையா, பண்ருட்டி ராமச்சந்திரன், நடிகர் ராமராஜன், உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விமான நிலையத்தில் திரண்டு வரவேற்பு கொடுத்தனர்.
கட்டுக்கடங்காத கூட்டம்
பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் வந்து குவிந்ததால் கட்டுக் கடங்காத கூட்டம் காணப்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
மனிதசங்கிலி
சென்னை விமான நிலையத்தில் இருந்து போயஸ் கார்டன் வரை வழிநெடுக தொண்டர்களும், மகளிரணியினரும், மனிதசங்கிலி போல் ரோட்டில் நின்று உணர்ச்சி மிக்க வரவேற்பு கொடுத்தனர். அவர்களுக்கு இரட்டை விரல் காட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார் ஜெயலலிதா.
தொண்டர்கள் உற்சாகம்
கொட்டும் மழை என்றும் பாராமல் போயஸ்கார்டன் அருகே காலை முதலே திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் பூக்களை தூவி வரவேற்பு கொடுத்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications