நீங்க வந்தா மட்டும் போதும்.. நீங்க வந்தா மட்டும் போதும்.. அடடே அதிமுக!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் வருகை அவரது கட்சியினருக்கு எவ்வளவு உற்சாகத்தைத் தருகிறது, எனர்ஜியைத் தருகிறது.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் அலுவலகம் வந்தபோது அதைக் கண்ணாரக் காண முடிந்தது.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு அப்படியே வாழை மட்டை போல மடங்கி் போய் மரியாதை செலுத்தும் அன்புக்குரிய பாசத்துக்குரிய தொண்டர்கள் ஜெயலலிதாவுக்குத்தான் கிடைத்துள்ளனர்.
வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இப்படிப்பட்ட தொண்டர்கள் இல்லை. கிடைக்கவும் மாட்டார்கள். அப்படி ஒரு பாசக் குவியலாக, அன்புப் படையலாக காட்சி தருகிறார்கள் அதிமுகவினர்.

வெளியே வந்தாலே திருவிழாதான்
ஜெயலலிதா எப்போதெல்லாம் வெளியே வருகிறாரோ அதை அப்படியே திருவிழா போல மாற்றி விடுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். தாரை தப்பட்டை முழங்க, டான்ஸ் ஆடி, பட்டாசு கொளுத்தி, லட்டு கொடுத்து கொண்டாடித் தள்ளி விடுகிறார்கள்.

எப்பவுமே இப்படித்தான்
இவர்கள் எப்பவுமே இப்படித்தானா அல்லது இப்படித்தான் எப்பவுமேவா என்று காண்போர் திண்டாடி அல்லாடிப் போகும் அளவுக்கு இவர்களின் அன்பு திக்குமுக்காட வைத்து விடும்.

அலுவலகத்திற்கு வந்தாலும் அமோக வரவேற்பு
முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலம் சரியில்லை என்று செய்திகள் உலா வந்த நிலையில் அதிமுகவினர் குழப்பமாக இருந்து வந்தனர். மேலும் ஜெயலலிதாவும் தலைமைச் செயலகம் பக்கம் கிட்டத்தட்ட 2 வாரமாக வரவே இல்லை. இந்த நிலையில் இன்று அவர் அலுவலகத்திற்கு வந்தார்.

அமர்க்கள வரவேற்பு
ஜெயலலிதா வரும் தகவல் அறிந்ததும் வழக்கம் போல அதிமுகவினர் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். ஓரமாக ஒதுங்கி நின்று அவர்கள் இரட்டை விரலைக் காட்டியும், அம்மா வாழ்க, புரட்சித் தலைவி வாழ்க என்றெல்லாம் கோஷம் போட்டு புனித ஜார்ஜ் கோட்டையை அலறடித்தனர்.

புன்முறுவல் பூத்த புரட்சி
இவர்களின் வரவேற்பைக் கண்டு முதல்வர் ஜெயலலிதாவும் மகிழ்ச்சி அடைந்து பதிலுக்கு இரட்டை விரலைக் காட்டியும், புன்முறுவல் பூத்தபடியும் காருக்குள் அமர்ந்தபடி சென்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications