பேரனுக்கு தடுப்பூசி போட மதுரை வந்த அதிமுக நிர்வாகி, மனைவி கார் விபத்தில் பலி
மதுரை: உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் அதிமுக நிர்வாகி ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி ஜெயா சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களின் பேரனான 6 மாத கைக்குழந்தை காயங்களுடன் தப்பியது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அதிமுக நிர்வாகி. அவரது மனைவி ஜெயா. அவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ராஜேந்திரனும், ஜெயாவும் மகள் வழிப்பேரனான 6 மாத குழந்தை வீரேஷுக்கு தடுப்பூசி போட நேற்று மதுரைக்கு காரில் கிளம்பினர்.

காரை ராஜேந்திரன் ஓட்டினார். மதுரையில் வீரேஷுக்கு தடுப்பூசி போட்ட பிறகு அவர்கள் மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பார்க்க சென்றனர். திருக்கல்யாணத்தை பார்த்துவிட்டு அவர்கள் காரில் ஊருக்கு திரும்பினர்.
கருமாத்தூர் அருகே வந்தபோது ராஜேந்திரனின் காரும், போடியில் இருந்து மதுரை நோக்கி வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இதில் ராஜேந்திரனும், ஜெயாவும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
குழந்தை வீரேஷ் சிறுகாயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து ராஜேந்திரன், ஜெயா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை வீரேஷ் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications