சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பதவியா.. துர்திருஷ்டம்... ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வேதனை
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை சசிகலாவிற்கு கொடுக்க நினைப்பது துர்திருஷ்டவசமானது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி கொடுப்பது என்பது துர்திருஷ்டவசமானது என்று ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா வேதனை தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அதிகார குவிமையமாக விளங்கும் பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவிற்கு பிறகு சசிகலாவிற்கு செல்லவிருக்கிறது. ஜெயலலிதா இறந்த உடன் யார் அந்த பதவியில் அமர வைப்பது என்ற பிரச்சனை அதிமுகவில் எழுந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு வகையான ஆலோசனை கூட்டங்களுக்கு பிறகு நேற்று முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்

இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனை ஒருநாளும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் இது துர்திருஷ்டமான முடிவு என்றும் கூறியுள்ளார். "சசிகலாவை என் அத்தை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தியே வைத்திருந்தார். மேலும், சசிகலா என் அத்தைக்கு தெரியாமல் பல விஷயங்களை செய்திருக்கிறார். இதனால் என் அத்தை சசிகலாவின் மேல் கோபமடைந்தார். அது எனக்கு நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ளார்.
எனினும், அதிமுகவின் எதிர்காலம் குறித்து கட்சியில் இருப்பவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் தீபா ஜெயகுமார் கூறியுள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications