எகிறிய "எக்" ரேட்..ஹோட்டல்களில் உயர்ந்த ஆம்லெட் விலை..
சென்னை : முட்டை விலை உயர்வால், ஹோட்டல்களில் ஆம்லெட் விலை அதிரடியாக உயர்ந்து பேச்சிலர்கள் உள்பட அனைவரின் நாக்கையும் கட்டிப்போட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை ஒரு முட்டை விலை ரூ.4 முதல் ரூ.4.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் முட்டை வியாபாரிகள் தெரிவித்து இருந்தனர்.

கடந்த வாரத்தில் ஒரு டஜன் முட்டை (12 முட்டைகள்) ரூ.48-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது விலை உயர்ந்ததைத் தொடர்ந்து சில்லறை கடைகளில் ஒரு டஜன் முட்டை ரூ.58-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் ஆம்லெட் விலையும் அதிகரித்துள்ளது.
சென்னையை சுற்றியுள்ள ஓட்டல்களில் சாதாரண நாட்களில் ஒரு ஆம்லெட் விலை ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. முட்டை விலை அதிகரித்த பிறகு, தற்போது ஒரு ஆம்லெட் விலை ரூ.15-க்கும், டபுள் ஆம்லெட் ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சில இடங்களில் கடைகளுக்கு ஏற்றாற்போல் ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆம்லெட் விலை மட்டும் அல்லாது, முட்டை சேர்க்கப்படும் உணவு பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
கொத்து புரோட்டா, வீச்சு புரோட்டா, ‘பிரெட்' ஆம்லெட் போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
ஏற்கனவே "சரக்கு" விலை உயர்வால் ஊற்றாமலேயே தலை சுற்றி வரும் குடிமகன்கள், பார்களிலும் முட்டை உணவுகள் விலை மேலும் உயர்ந்ததால் குறைந்தபட்ச சைட் டிஷ்ஷுக்கும் தடா போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications