நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பால் ஆட்சி கவிழும் அபாயத்தில் இருந்து எடப்பாடி அரசு 'தி கிரேட் எஸ்கேப்'
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளதால் எடப்பாடி அரசு கவிழும் அபாயத்தில் இருந்து தப்பியது.
Recommended Video

சென்னை: தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு கவிழும் அபாயத்தில் இருந்து தப்பிவிட்டது.
தமிழக சட்டசபையில் மொத்தம் 234 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனடிப்படையில் ஆட்சி நீடிக்க தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 118.

தகுதி நீக்க வழக்குக்கு முன் சட்டசபை பலம்:
அதிமுக- 134
எதிர்க்கட்சிகள்- 98 (திமுக - 89; காங்கிரஸ்- 8; இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1)
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்குப் பின் சட்டசபை பலம்:
மொத்தம் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை: 216
பெரும்பான்மைக்கு தேவை 109 எம்.எல்.ஏக்கள்
அதிமுக- 110 (சபாநாயகரை சேர்த்தால் 111)
எதிர்க்கட்சிகள்- 98 (திமுக - 89; காங்கிரஸ்- 8; இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1)
சுயேட்சை (தினகரன்)- 1
அதிமுக தோழமை கட்சிகள்- 3
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் - 3 (பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி)
தற்போதைய நிலையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையுடன் இருக்கிறது.
இந்த நிலையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால் 3-வது நீதிபதியின் தீர்ப்புக்கு காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என நீதிபதிகள் ஒருசேர தீர்ப்பளித்திருந்தால் எடப்பாடி அரசு கவிழும் நிலை இருந்தது.
அதாவது தகுதி நீக்கம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தால் சட்டசபை பலம்:
மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை: 234
பெரும்பான்மையை நிரூபிக்க தேவை- 118
அதிமுக- 110 (சபாநாயகரை சேர்த்தால் 111)
திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக்- 98
சுயேட்சை (தினகரன்)- 1
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்- 21
அதிமுக தோழமை கட்சிகள்(அன்சாரி, தனியரசு, கருணாஸ்)- 3
என்கிற நிலைதான் இருந்திருக்கும். இதனால் எடப்பாடி அரசால் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்களை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழும் நிலை உருவாகி இருக்கும். ஆனால் தற்போது எடப்பாடி அரசு கவிழும் அபாயத்தில் இருந்து தப்பிவிட்டது.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications