ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல் சேவையிலும் பாதிப்பு.. சிக்னல் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் அவதி
ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல்லுக்கும் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதியடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல்லுக்கும் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதியடைந்தனர்.
இந்நிலையில் சிக்னல் பிரச்சனை தற்போது சீரமைக்கப்பட்டுவிட்டதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் சில இடங்களில் ஏர்டெல் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து சிக்னல் கிடைப்பதில் பிரச்சனை இருந்தால் செல்போனை ரீஸ்டார்ட் செய்யலாம் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் சிரமமடைந்ததற்கு வருந்துகிறோம் என்றும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications