சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரின் குடும்ப வாரிசுகளின் கல்விச் செலவை பாமக ஏற்கும்: அன்புமணி ராமதாஸ்
திருவண்ணாமலை: துப்பாக்கிச் சூட்டில் பலியான 20 பேரின் குடும்ப வாரிசுகளின் கல்விச் செலவை பாமக ஏற்கும் என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்கள் 20 பேரை ஆந்திர மாநில சிறப்புக் காவல்படையினர் கொடூரமான முறையில் படுகொலை செய்தனர்.

அம்மாநில போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினரை பாமக இளைஞரணித்தலைவரும் தர்மபுரி எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் போளூரில் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் பேசினார்.அப்போது அவர், ''ஆந்திராவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 20 பேரின் வாரிசுகளின் கல்விச்செலவை பாமக ஏற்கும். வாரிசுகள் உயர் கல்வி வரை படிக்கும் செலவை ஏற்கிறோம். 20 பேரின் குடும்பங்களுக்கும் 25 லட்சம் பணம், வீடு, வேலைவாய்ப்பு தர தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சி.பி.ஐ விசாரணை தேவை
இதனிடையே தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அப்பாவி தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஆந்திர மாநில அரசை, மத்திய அரசு கலைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திரத்தில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது. இந்தச் சம்பவத்துக்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இது இரண்டு மாநிலங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியாகும்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 356-ஆவது பிரிவை பயன்படுத்தி சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசை, மத்திய அரசு கலைத்து விட்டு, அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications