பொறியியல் படிப்பிற்கு விண்ணபித்த மாணவர்களுக்கு.. அண்ணா பல்கலை. இன்று ரேண்டம் எண் வெளியீடு
பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலைக் கழகம் இன்று இணையதளத்தில் வெளியிட்டது.
சென்னை: பொறியியல் படிப்பில் சேரவிருக்கும் மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலைக் கழகம் இன்று வெளியிட்டது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடுகளுக்கான இடங்களும் அண்ணா பல்கலைக்கழக ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு சேர்க்கை நடைபெற உள்ளது.
பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே மாதம் 1ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்ப பதிவு நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 68 லட்சம் பேர் இணையத்தின் மூலம் விண்ணப்பித்தனர்.

1.50 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
இதில் 1 லட்சம் 40 ஆயிரம் பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதற்காக ரேண்டம் எண் வழங்கப்படுவது வழக்கம்.

ரேண்டம் எண் வெளியீடு
அந்த ரேண்டம் எண்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இணையத்தில் இன்று வெளியிட்டது. இந்த எண் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணை மாணவர்கள் இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

27ல் கவுன்சிலிங்
இதனைத் தொடர்ந்து வரும் 22ம் தேதி பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிட உள்ளது. இதனையடுத்து மாணவர்களுக்கான கவுன்சிலிங் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.

சிறப்பு ஏற்பாடுகள்
சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ளனர். அவர்களுடன் பெற்றோர்களும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருவார்கள் என்பதால், அதற்கான முறையான சிறப்பு ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications