திமுக கட்சி நிகழ்ச்சியில் கூட்டம் கூட்ட அரசு பள்ளி மாணவர்களை பயன்படுத்துவதா? அண்ணாமலை கொந்தளிப்பு
கோவை: கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்களை பயன்படுத்த முயற்சிக்கும், திமுகவின் அகங்காரச் செயல்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள், 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களை கட்சி நிகழ்ச்சிக்கு பயன்படுத்தியதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கோவை மாவட்டம் பொள்ளாச்சி சமத்தூர் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை, நான் முதல்வன் திட்டம் என்று பொய் சொல்லி திமுக கட்சி நிகழ்ச்சிக்கு வர வற்புறுத்தியிருக்கிறார் அந்தப் பகுதி திமுக கவுன்சிலரின் கணவர்.
கட்டிட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு. பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை.
இந்த நிலையில், திமுக கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க, அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்த முயற்சிக்கும், திமுகவின் அகங்காரச் செயல்பாட்டினை, வன்மையாகக் கண்டிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications