விஏஓ முதல் தாசில்தார் வரை.. ராத்திரி 7 மணிக்கு எகிறி குதித்த மொரட்டு ஆள்.. நீலகிரியே ஆடிப்போச்சு
ஊட்டி: தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்கள், சோதனை சாவடிகள், அரசு அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், இரவு முதல் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளை கண்டதும் தப்ப முயன்ற புரோக்கர் வசமாக சிக்கினார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு திடீர் நடவடிக்கையில் இறங்குவது வழக்கமாகும். அந்த வகையில் பொதுமக்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களை வசூல் செய்வதை தடுக்கும் விதமாக தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

நேற்று செங்குன்றம், ஆலந்தூர், அச்சரப்பாக்கம்,திருப்போரூர், காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், திருச்செங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்திலும், நெல்லை மாவட்டம் ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகம், தூத்துக்குடி யூனியன் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதேபோல் கொல்லங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை காட்பாடியில் உள்ள போக்குவரத்து சோதனைச்சாவடி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை சங்கராபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தினார்கள். கோவை மாவட்டத்தை பொறுததவரை சோதனைச்சாவடி மற்றும் நகர ஊரமைப்பு அலுவலகம் ஆகிய 2 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்தினார்கள். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் சோதனை நடத்தினார்கள்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் பல்வேறு சான்றிதழ்களை வழங்குவதற்காக அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும், இதனை சாதகமாக பயன்படுத்தி இடைத்தரகர்கள் பொதுமக்களிடமிருந்து பணத்தை பெற்று அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அலுவலக நேரம் முடிந்த பிறகு அலுவலகத்திற்கு வந்து சான்றிதழ்களை பெற்று செல்வதாகவும், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் நேற்று இரவு 7 மணி அளவில் நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில், அதிகாரிகள் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து புரோக்கர் ஒருவர் தப்பி ஓட முயற்சித்தார். அவரை பிடித்த அதிகாரிகள் அதிரடியாக அலுவலகத்தின் கதவுகளை மூடி விசாரணை நடத்தினார்கள்.
அதன்பின்னர் கோத்தகிரி தாசில்தார் உள்பட அலுவலக ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் தனித்தனியாக டிஎஸ்பி தலைமையில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இரவு வரை நீடித்த சோதனையில் அங்கு பரபரப்பு நிலவியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications