மறுபிரேத பரிசோதனை கோரிக்கை நிராகரிப்பு- 6 பேர் உடலை பாதுகாக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: ஆந்திரா காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட 6 பேரின் உடலை மீண்டும் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதே நேரத்தில் மறு உத்தரவு வரும் உடல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 20 தமிழர்களை ஆந்திரா போலீஸ் சுட்டுக்கொலை செய்தது. இதில் 6 பேரின் உடலை மீண்டும் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று முனியம்மாள் உள்பட 6 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இம்மனு இன்று காலை நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து ஆந்திரா உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.. உச்சநீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்த இடம் சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குள் வராது. அதனால் ஆந்திரா உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில்தான் மனுதாரர் முறையிட முடியும். அதே நேரத்தில் மறு உத்தரவு வரும் வரை உடல்களைப் பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 17-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications