சிறுமியை சீரழித்துக் கைதான அறவழிச் சித்தரின் மனைவி தீக்குளித்துத் தற்கொலை
சென்னை: சென்னையைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் அச்சிறுமியை விபச்சாரக் கும்பலிடம் அனுப்பி கொடூரமான நிலைக்கு ஆளாக்க காரணமாகி கைதான வியாசர்பாடி அறவழிச்சித்தரின் மனைவி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த எண்கணித சோதிடர் அறவழி சித்தர். 42 வயதாகும் இவரது மனைவி பெயர் தனலட்சுமி.
இரவு நேர பூஜை, குளி சொல்வது என இருந்து வந்தார் அறவழி சித்தர். இரவு நேர பூஜையில் அவர் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் திருப்பதி அருகே ஒரு சிறுமி போலீஸாரிடம் சிக்கினார். அந்த சிறுமி கொடுத்த தகவல் போலீஸாரை அதிர வைத்தது.
வியாசர்பாடியைச் சேர்ந்த அந்த சிறுமி, அறவழிச் சித்தரால், சிறுமியின் தாயாரின் ஒத்துழைப்புடன் சீரழிக்கப்பட்டார். பின்னர் சுரேஷ் என்ற நபரிடம் சிறுமி விற்கப்பட்டுள்ளார். சுரேஷ், ஒரு விபச்சாரக் கும்பலிடம் சிறுமியை அனுப்பியுள்ளான். அங்கு பலரிடம் அந்த சிறுமி அனுப்பப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்.

இதையடுத்து சென்னை போலீஸாரிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அறவழி சித்தர், சுரேஷ் உள்ட 5 பெண்கள், 2 ஆண்களைக் கைது செய்தனர்.
இந்த நிலையில் அறவழிச் சித்தரின் மனைவி தனலட்சுமி தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து விட்டார். வீட்டு பாத்ரூமில் அவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. உடல் முழுவதும் எரிந்து போய் விட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications