For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

களவீரரே! நக்கீரரே! சுதேசியே! பீஷ்மரே! கம்பீரமே!.. மு.க. அழகிரி பிறந்த நாள் போஸ்டர் ரவுண்ட் அப்!!

By Mathi
Google Oneindia Tamil News

மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் 64வது பிறந்த நாள் மதுரையில் நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. வழக்கம் போல மு.க. அழகிரி ஆதரவாளர்கள் விதம் விதமான வாசகங்களுடன் போஸ்டர்களை அச்சடித்து அனைவரையும் அசத்தியுள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள தனது வீட்டில் காலை 9 மணி அளவில் மனைவி, மகன், மருமகள் உள்ளிட்ட உறவினர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்து பிறந்த நாள் விழா நடைபெற்ற முத்தையா மன்றம் வரை சுமார் 4 மணி கிலோ மீட்டர் வரை ஊர்வலமாக அவர் அழைத்து செல்லப்பட்டார். வழி நெடுக அவரது ஆதரவாளர்கள் மேள தாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

பெரியார் பேருந்து நிலையத்தில் முன்னாள் கவுன்சிலர் தம்பித்துரை தலைமையில் திருநங்கைகள் 10 பேர் ஆட்டம், பாட்டத்துடன் வரவேற்பு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து ஊர்வலமாக மண்டபம் வரை சாரட் வண்டியில் மு.க. அழகிரி அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் ஒட்டுமொத்தமாக மதுரை நகரமே பகல் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெருந்துயரத்தை அனுபவித்தது.

மட்டன் பிரியாணி விருந்து

மட்டன் பிரியாணி விருந்து

மண்டபத்தில் ஆதரவாளர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மு.க.அழகிரிக்கு கேடயம், வாள், கத்தி உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை கொடுத்து மகிழ்ந்தனர். மண்டபத்தில் பிறந்த நாள் விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு மட்டன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தி.மு.க. நிர்வாகிகள்

தி.மு.க. நிர்வாகிகள்

தி.மு.க. விவசாய அணி மாநிலச் செயலரும், ராஜ்யசபா எம்.பி.யுமான கே.பி. ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் வ. முல்லைவேந்தன் ஆகியோர் அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் யாரும் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கவில்லை.

மூன்றரை மணி நேர ஊர்வலம்

மூன்றரை மணி நேர ஊர்வலம்

மு.க. அழகிரி வீட்டில் காலை 9.30 மணிக்கு தொடங்கிய வாகன ஊர்வலம், பிறந்த நாள் விழா நடைபெற்ற ராஜா முத்தையா மன்றத்தை பிற்பகல் 1 மணிக்கு அடைந்தது. இதனால் பகல் முழுவதும் மதுரையே முடங்கிப் போனது.

களவீரரே...

களவீரரே...

மு.க. அழகிரியின் பிறந்த நாளையொட்டி வழக்கம் போல அனைவரையும் அசத்தும் வகையில் அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.

அண்ணனே!

அண்ணனே!

அரியனை தேவையில்லை! ஆடம்பரம் தேவையில்லை! உயிரினும் மேலான எங்கள் அண்ணனே! என்று எம்.எஸ். குரூப்ஸ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

நக்கீரரே!

நக்கீரரே!

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே! என்ற புலவர் நக்கீரனாக அழகிரியை சித்தரித்து...

நீ உயிரெழுத்து

நீ உயிரெழுத்து

தலைமைக்கு வேண்டுமானால் நீ ஆ (ஃ)யுத எழுத்து...எங்களுக்கு உயிரெழுத்து என்று சீண்டும் போஸ்டர்..

முதலாளித்துவத்தை எதிர்க்கும் சுதேசியே!

முதலாளித்துவத்தை எதிர்க்கும் சுதேசியே!

தி.மு.க. தலைமையை விமர்சிக்கும் வகையில் முதலாளித்துவத்தை எதிர்க்கும் சுதேசியே என்று அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பையும் ஏற்படுத்தினர்.

ஓர் முக்கிய அறிவிப்பு

ஓர் முக்கிய அறிவிப்பு

வானிலை மைய ரமணன் பாணியில் அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்..

2016-ல் முதல்வராம்!

2016-ல் முதல்வராம்!

2016-ல் முதல்வராம்!

அஞ்சா நெஞ்சர்!

அஞ்சா நெஞ்சர்!

அஞ்சா நெஞ்சர்!

'மு.க.அ' என்றால் என்ன தெரியுமா?

'மு.க.அ' என்றால் என்ன தெரியுமா?

மு.க. அழகிரி என்றால் முத்துவேலர் கருணாநிதி அழகிரி என்பதை நாம் அறிவோம்.. ஆனால் அழகிரி ஆதரவாளரின் கண்டுபிடிப்பு இதோ!

தலைமகனே!

தலைமகனே!

தலைமகனே!

டி.ஆர். தோற்றார் போங்க..

டி.ஆர். தோற்றார் போங்க..

கொடை மேகமே! படை வேகமே என்று அடுக்கு மொழியில் போஸ்டர் ஒட்டி டி. ராஜேந்தரை மிஞ்சிய மு.க. அழகிரி விசுவாசிகள்..

செல்ல பிள்ளை

செல்ல பிள்ளை

உங்களை வெல்ல யாரும் இல்லை.. நீங்களே தலைவரின் செல்ல பிள்ளையாம்..

தாத்தா.. விசுவாசமே!

தாத்தா.. விசுவாசமே!

இப்படியும் ஒரு போஸ்டரை பாருங்கள்..

எங்களின் முதல்வரே!

எங்களின் முதல்வரே!

எப்படியும் அழகிரியை 2016-ல் முதல்வராக்கிவிட்டுதான் ஓய்வார்கள் போல...

பீஷ்மரையும் விட்டு வைக்கலையே!

பீஷ்மரையும் விட்டு வைக்கலையே!

பீஷ்மரையும் விட்டு வைக்கலையே!

அந்த நாள் ஞாபகம்..

அந்த நாள் ஞாபகம்..

மு.க. அழகிரி புல்லட்டில் தனது மனைவியுடன் செல்லும் ப்ளாக் அண்ட் ஒயிட் படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்

அண்ணன் சொல்மிக்க..

அண்ணன் சொல்மிக்க..

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பது அழகிரி ஆதரவாளர்கள் கையில் படும்பாடு...

கம்பீரமே!

கம்பீரமே!

சரத்குமார் தனிக்கட்சி கண்டு போய்விட்டாலும் அவர் நடித்த படத்தின் டைட்டிலை அழகிரிக்கு சூட்டிய விசுவாசிகள்

ரஜினி ஸ்டைல்ல..

ரஜினி ஸ்டைல்ல..

லிங்கா படத்துல வரும் ரஜினி மாதிரியே தக.. தகன்னு அண்ணன் இருக்காரே...

மண்டியிட்டு வீழேன்

மண்டியிட்டு வீழேன்

தி.மு.க மாவட்ட துணை அமைப்பாளர் அ. சரவணன் அடித்திருக்கும் போஸ்டர் இது..

வெள்ளை உள்ளமே!

வெள்ளை உள்ளமே!

உன்னை உன்னால்தான் வெல்ல முடியும்! வெள்ளை உள்ளமே!

சிவம்

சிவம்

பகுத்தறிவு பேசும் தி.மு.க. போஸ்டரில் 'குடியேறிய' சிவபெருமான்

புனிதனே!

புனிதனே!

புரிந்தவர்க்கு புனிதன் எனும் சுவரொட்டி..

பார்ன் டூ ரூல்

பார்ன் டூ ரூல்

அழகிரியின் ஆதரவாளர்கள் ஆங்கிலத்திலும் அசத்துவார்களே..

நீதிபதி நீ

நீதிபதி நீ

நீதித்துறையை மட்டும் விட்டு வைப்பார்களா அழகிரி ஆதரவாளர்கள்..


ஸ்ஸ்ஸ்.... முடியலை சாமி!

English summary
The supporters of former Union minister M K Azhagiri, who had earlier pledged to make eyes turn when they celebrated his birthday, did just that on Friday. They brought traffic to a standstill on major routes in Madurai on Friday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X