For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையை தொடர்ந்து வங்கதேச கடற்படை அட்டூழியம்- 26 குமரி மீனவர்களை சிறைப்பிடித்தது

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: இலங்கைக் கடற்படை பாணியில் வங்கதேச கடற்படையினர் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 26 மீனவர்களை சிறை பிடித்துச் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த 26 பேரும் கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கொல்கத்தாவிலிருந்து 80 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை வங்கதேச கடற்படையினர் வந்து பிடித்துச் சென்றனர்.

Bangladesh navy apprehends 26 fishermen from Tamil Nadu

மீனவர்களுடன் 3 படகுகளையும் வங்கதேச கடற்படையினர் பறிமுதல் கொண்டு சென்று விட்டனர். இந்திய எல்லையைத் தாண்டி இவர்கள் மீன்பிடித்ததால்தான் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவம் குறித்து தூத்துரூக்கு தற்போது தகவல் கிடைத்துள்ளது.

இந்த மீனவர்கள் நவம்பர் 17ம் தேதி கொல்கத்தாவிலிருந்து மீன்பிடிக்கச் சென்றிருந்தனர் என்று தூத்தூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை கடத்திச் செல்வது தொடர் கதையாகி வரும் நிலையில் இப்போது வங்கதேச கடற்படையினரும் அதேபோல நடந்திருப்பது தமிழக மீனவர்களை அதிர வைத்துள்ளது.

English summary
Twenty six fishermen from Thoothoor area in the western coast of Kanyakumari in Tamil Nadu and their three fishing boats were apprehended by Bangladesh navy about 80 nautical miles off Kolkata coast on Tuesday. Fishermen in the coastal village received information after one of the boats in vicinity alerted them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X