மாட்டிறைச்சி அரசியல் நடத்தும் மதவெறிக் கும்பல் கொட்டத்தை அடக்க வேண்டும்!: வைகோ
சென்னை: மதத்தின் பெயரால் மக்களைப் பிளவு படுத்தி, இரத்தக் களரியில் ஈடுபட்டு வரும் இந்துத்துவா சக்திகள் தற்போது மாட்டிறைச்சி அரசியல் நடத்தி மத மோதல்களைத் தூண்டி வருகின்றனர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த ஓர் ஆண்டில், இந்துத்துவா மதவெறிக் கூட்டத்தின் வன்முறைகள் அதிகரித்து விட்டன. இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் இந்து மத வெறிக் கும்பல் செயல்பட்டு வருவதும், அதற்கு நரேந்திர மோடி அரசு துணை போவதும் வன்மையான கண்டனத்துக்குரியது.

மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி, இரத்தக் களரியில் ஈடுபட்டு வரும் இந்துத்துவா சக்திகள் தற்போது மாட்டிறைச்சி அரசியல் நடத்தி மத மோதல்களைத் தூண்டி வருகின்றனர். மோடி அரசு பதவி ஏற்றப்பின்னர், இந்தியாவில் பசு வதையை தடை செய்ய தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும் என்று மக்களின் உணவுப் பழக்கத்தில் தலையிட்டு, மதத்தின் பெயரால் திட்டமிட்டு வன்முறைக்கு தூயபமிட்டுள்ளனர் இந்துத்துவா சக்திகள்.
இந்நிலையில்தான், கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம், கவுதம புத்தர் மாவட்டம் தாத்ரியை அடுத்துள்ள பிசோதா என்ற கிராமத்தில் முகமது இக்லாக் என்பவர் பசு மாட்டிறைச்சி சமைத்து குடும்பத்துடன் உண்டதாக பரவிய வதந்தியால், 200 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் வீடு புகுந்து தாக்கி, ஏற்கனவே டைபாய்டு காய்ச்சலில் படுத்தப் படுiக்கையாக இருந்த முகமது இக்லாக்கை கொடூரமாக அடித்துக் கொலை செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லான்கேட் தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ., சேக் அப்துல் ராஷீத் என்பவர், சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அளித்த விருந்தில், மாட்டிறைச்சி உணவு பரிமாறப்பட்டது என்பதால், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சேக் அப்துல் ராஷீத்தை சூழ்ந்துகொண்டு கடுமையாக தாக்கி உள்ளனர்.
இந்துத்துவா மதவெறிக் கூட்டத்தின் கோர தாண்டவத்தால், நாட்டின் மதச் சார்பின்மை தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது. இந்துத்துவா மதவெறிக் கருத்துகளை எதிர்க்கின்ற எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் படுகொலை செய்யப்படும் நிலைமை தொடர்ந்து நடைபெறுகின்றன.
மராட்டிய மாநிலம் புனே நகரில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய நரேந்திர தபோல்கர் எனும் சீர்திருத்தவாதி இரு ஆண்டுகளுக்கு முன்பு மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த ஆண்டு பிப்ரவரி 20 இல் மராட்டிய மாநிலத்தின் கோலாபூரில் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகப் போராடிய முற்போக்கு எழுத்தாளர் கோவிந்த் பன்சாரே சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்துத்துவா கருத்துகளை விமர்சனம் செய்து வந்த கன்னட மொழி அறிஞர் பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி ஆகஸ்டு 30ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கன்னட முற்போக்கு எழுத்தாளரும், பேராசிரியருமான கே.எம்.பகவான் கொல்லப்படுவார் என்று மதவெறியர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்துத்துவா கும்பலின் கொலை வெறிக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய மோடி அரசு, இந்தியப் பண்பாட்டு பன்முகத்தன்மையை பாதுகாக்கவில்லை என்று பிரபல எழுத்தாளரும், ஜவஹர்லால் நேருவின் உறவினருமான நயன்தாரா சேகல் கண்டனம் தெரிவித்து, 1986ம் ஆண்டு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதமி விருதை திருப்பி அளித்துவிட்டார். மேலும் பேராசிரியர் கல்புர்கி கொலையைக் கண்டித்து இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ் தமது சாகித்ய அகாதமி விருதை திருப்பி அளித்திருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து எழுத்தாளர்களும், அறிவு ஜீவிகளும் மதவெறியர்களால் கொல்லப்படுவதைக் கண்டித்து கவிஞரும், லலித் கலா அகாதமியின் முன்னாள் தலைவருமான அசோக் வாஜ்பேயி தமது சாகித்ய அகாதமி விருதை திருப்பிக் கொடுத்துவிட்டார்.
இவையெல்லாம் இந்தியாவில் மதவெறியாளர்களின் கோர முகத்தை அம்பலப்படுத்தி இருக்கும் சம்பவங்களாகும். இந்துத்துவா மதவெறிக் கும்பல்களின் கொட்டத்தை அடக்குவதற்கு ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒருசேர கைகோர்த்து எழ வேண்டும். இந்துத்துவா மதவெறி சக்திகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், அதற்குத் துணைபோகும் மோடி அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications