எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்
எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதற்கான முயற்சிகளை எடுப்பேன் என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்: எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு நிச்சயமாக நான் முயற்சி செய்வேன் என இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவினால் வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் சனிக்கிழமையன்று திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட நடிகர் அர்ஜுன், அஞ்சலி செலுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் பேசும் போது, எஸ்பி பாலசுப்ரமணியம் பல விருதுகளை பெற்றிருக்கிறார். அவருக்கு கண்டிப்பாக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள் என்று தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் இதே கருத்தினை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் நண்பரும் இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன், எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு நிச்சயமாக நான் முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய கங்கை அமரன், பாரத ரத்னா விருது குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருப்பதால் எஸ்.பி.பிக்கு புகழ் சேர்க்கும் விதமாக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதற்கான முயற்சிகளை எடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications