பெண் குளிப்பதை வீடியோ எடுத்த பாஜக பிரமுகர் கைது.. முன்னாள் ராணுவ வீரராம்! தென்காசி அருகே கொடுமை
தென்காசி: தென்காசி அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்த பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் புளியரை பகுதியில் வசித்து வருபவர் ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் பாஜகவின் தென்காசி மாவட்ட பட்டியலின அணியின் மாவட்டத் தலைவராக இருந்தவர். தற்போதும் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.

இவர் தனது பக்கத்து வீட்டுப் பெண் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்ததை மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட அந்தப் பெண் அதிர்ச்சியில் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து ரவி அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், புளியரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த ரவியை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், பாஜகவில் முன்னாள் பட்டியலின அணியின் மாவட்ட தலைவர் என்பதும் தெரியவந்துள்ளது.அவரை கைது செய்த காவல்துறையினர் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் கடும் தண்டனை விதிக்கும் வகையிலான 2 சட்ட திருத்த மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இது அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டங்களில் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் மீண்டும் மீண்டும் ஒருவர் கைதானால் அதிகப்பட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications