மெர்சல் மட்டுமல்ல, இனி எந்தப் படம் ஜிஎஸ்டியை எதிர்த்தாலும் விடமாட்டோம்!- தமிழிசை

Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த திரைப்படத்தில் ஜிஎஸ்டி பற்றி காட்சி வைத்தாலும் பாஜக விடாது, என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.

விஜய் நடித்த மெர்சல் படத்தில் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி, ஏழைகளுக்கு மருத்துவம் மறுக்கப்படுதல், ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்தது போன்ற பாஜக ஆட்சியின் அவலங்களை போகிற போக்கில் சுட்டிக் காட்டி காட்சிகள் வைத்திருந்தனர்.

BJP will oppose any movie with anti GST scenes, says Tamilisai

இதனால் அக்கட்சியின் தமிழகத் தலைவர்கள் கொந்தளித்து, ஆளாளுக்கு அறிக்கைவிட, அது தேசிய அளவிலான பிரச்சினையாகி பாஜகவின் மானத்தை வாங்கிவிட்டது.

மெர்சல் இப்படி பூமராங் ஆகும் என எதிர்ப்பார்க்காத பாஜக தலைவர்கள், குறிப்பாக தமிழிசை சௌந்தர்ராஜன் இப்போது மழுப்பலாகப் பேசி அறிக்கை விட ஆரம்பித்துள்ளார்.

இன்று அவர் போட்டுள்ள ஒரு ட்வீட்டில், "விஜய் படம் மட்டுமல்ல, எந்தப் படத்தில் ஜிஎஸ்டி பற்றி கூறப்பட்டிருந்தாலும், பாஜக கருத்துக்களை முன்வைக்கும்," என்று கூறியுள்ளார்.

அதாவது ஜிஎஸ்டி, டீமானிடைசேஷன் போன்ற எந்தப் பிரச்சினையையும் காட்சிகளாகவோ, வசனங்களாகவோ இனி சினிமாவில் வைக்கக் கூடாது என்பதுதான் தமிழிசை சொல்ல வரும் கருத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+