மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மர்ம நபர் ஒருவன் 108க்கு நேற்று நள்ளிரவில் போன் செய்து மதுரையில் உள்ள மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இன்னும் சில நிமிடங்களில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டான். உடனே இது குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அண்ணா நகர் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு இரவு 12.45 மணியில் இருந்து அதிகாலை வரை பேருந்து நிலையத்தில் குண்டுகள் ஏதாவது வைக்கப்பட்டுள்ளதா என்று தேடினர். ஆனால் குண்டுகள் எதுவும் இல்லாததை தெரிந்த பின்னர் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.
இதற்கிடையே வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்வதை அறிந்த பயணிகள் பேருந்து நிலையத்தை விட்டு ஓடினர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒருவர் 108க்கு போன் செய்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் குண்டு வெடிக்கும் என்று கூறினான். போலீசார் விசாரணை நடத்தி அந்த நபர் சென்னையை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications