திருச்சி பாஜக மாநாட்டு மேடைக்கு வெடி குண்டு மிரட்டல்...
திருச்சி: திருச்சியில், இன்று நடக்கும் பாஜக இளம் தாமரை மாநாட்டு மேடையில் வெடிகுண்டு வெடிக்கும், என நேற்று இரவு போன் மூலம் மிரட்டல் வந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி, பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில், இன்று மாலை பா.ஜ.க சார்பில் இளம் தாமரை மாநாடு நடக்கிறது. அதில், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பா.ஜ.க மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, மேடை, போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு, 7.30 மணிக்கு, பொன்மலை உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, மர்ம போன் வந்தது. அதில் பேசியவர், பாஜக மேடையில் வெடிகுண்டு வெடிக்கும்; இதை யாரும் தடுக்க முடியாது என் கூறியுள்ளார்.
போனை எடுத்து பேசிய, சிறப்பு எஸ்.ஐ., தங்கவேலு, நீங்கள் யார்? எனக் கேட்டதற்கு, குண்டு வைக்கப் போகிறவன் எனக் கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
உடனடியாக, மர்ம நபர் பேசிய போன் எண்ணை கண்டுபிடிக்கும் முயற்சியில், போலீசார் ஈடுபட்டனர். வில் போன் இணைப்பில் உள்ள, 4442068 எண்ணில் இருந்து மர்ம நபர் பேசியதை, போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அந்த எண் யாருடைய பெயரில் உள்ளது, என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் மேலும் மாநாட்டு மேடைக்கு, போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications