அண்ணனுடன் தண்ணி அடித்ததைத் தட்டிக் கேட்ட அண்ணியைக் கொன்ற வாலிபர்.. தானும் தற்கொலை!
சிதம்பரம்: சிதம்பரம் அருகே தனது அண்ணனுடன் உட்கார்ந்து வீட்டுக்கு வெளியே மது அருந்தியுள்ளார் ஒரு தம்பி. இப்படியா இருவரும் சேர்ந்து குடித்துக் கெடுவீர்கள் என்று அதைத் தட்டிக் கேட்டுள்ளார் அண்ணி. இதனால் கோபமடைந்த தம்பி, தனது அண்ணியை அடித்துக் கொன்று விட்டார். பின்னர் வேதனையில் அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வடஹரிராஜபுரத்தைச் சேர்ந்த சந்திரகாசி மகன் கோதண்டபாணி (39), விஜயகுமார் (32). இருவரும் குவைத்தில் வேலைபார்த்து வருகினறனர். சில மாதங்கள் முன்பு ஒன்றன், பின் ஒன்றாக இருவரும் சொந்த ஊரான வடஹரிராஜபுரத்திற்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் புதன்கிழமை அண்ணன், தம்பி இருவரும் வீட்டின் வெளியே மதுகுடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அண்ணன் மனைவி ராஜலட்சுமி (30) கணவரை உள்ளே வருமாறு அழைத்துள்ளார். மனைவி கூப்பிடுவதை பொருட்படுத்தாத கோதண்டபாணி, இன்னும் சிறிது நேரம் கழித்து வருவதாக கூறியுள்ளார்.
இப்படிக் குடித்துக் கெடுகிறீர்களே என்று வேதனைப்பட்ட ராஜலட்சுமி, தனது மைத்துனரையும் திட்டியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. ஆத்திரமடைந்த விஜயகுமார் அருகே இருந்து மண் அள்ளும் இரும்பு கரண்டியால் ராஜலட்சுமியை தாக்கியுள்ளார். இதில் ராஜலட்சுமி தலைமையில் பலத்த காயமுற்று ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார்.
உடனடியாக அவரை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜலட்சுமி இறந்தார். இதனை கேள்விப்பட்ட விஜயகுமார் ஆற்றங்கரையோரம் உள்ள புளிய மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இறந்த போன ராஜலட்சுமிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தூக்குப் போட்டுக் கொண்ட விஜயகுமாருக்கு கடந்த 4ம் தேதிதான் திருமணம் நிச்சயமானது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications