கட்டட விபத்திற்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னையை அடுத்த போரூருக்கு அருகில் உள்ள மவுலிவாக்கம் என்ற இடத்தில் கட்டப்பட்டு வந்த 11 அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 28 ஆம் தேதி இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் 50 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக வந்த தகவலும் கவலை அளிக்கிறது. அவர்கள் அனைவரும் வெகுவிரைவில் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்துக்கு இடி தாக்கியது தான் காரணம் என்று கட்டுமான நிறுவனத்தின் சார்பிலும், வேறு காரணங்கள் இருப்பதாக அதிகாரிகள் தரப்பிலும் கூறப்படுகிறது. உண்மையில் 11 மாடிக் கட்டடம் கட்ட அனுமதி அளித்த அரசு அதிகாரிகள், தரமில்லாத பொருட்களைக் கொண்டு கட்டிடம் கட்டிய கட்டுமான நிறுவனம் என இருதரப்பிலும் தவறு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. போரூர் மவுலிவாக்கம் பகுதியில் இதுவரை 5 மாடிகளுக்கும் அதிக உயரம் கொண்ட கட்டடங்களைக் கட்ட அனுமதி அளிக்கப்படாத நிலையில், மணற்பாங்கான இடத்தில் மண் பரிசோதனை உள்ளிட்ட எந்த ஆய்வும் நடத்தாமல் 11 மாடி குடியிருப்புக் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் எந்த அடிப்படையில் அனுமதி அளித்தது என்பது தெரியவில்லை.
கட்டுமான பணியிலும் பல குளறுபடிகள் நிகழ்ந்திருக்கின்றன. கட்டிடத்தின் வடிவமைப்புப் பொறியாளருக்கும், களத்தில் பணியாற்றிய பொறியாளர்களுக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை; வடிவமைப்பு பொறியாளரின் அறிவுரைகளை கட்டுமான அதிபர் பொருட்படுத்தாமல் அனுபவம் இல்லாத பொறியாளர்களைக் கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொண்டார் என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இரு தரப்பினரின் பொறுப்பற்ற செயலால் 17 பேர் தங்களின் விலை மதிப்பில்லாத உயிரை இழந்திருப்பதுடன், ஏராளமானோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். விபத்துக்கான காரணங்களைக் கண்டுபிடித்து இனியும் இப்படி ஒரு விபத்து நடக்காத வண்ணம் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். விபத்துக்குக் காரணமாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் தமிழக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications