பஸ் ஸ்டிரைக்- பயணிகளின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மண்!
நெல்லை: தமிழ்நாட்டில் 3 ஆவது நாளாக பஸ் ஸ்டிரைக் நீடிப்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகி, திண்டாடி வருகின்றனர்.
புத்தாண்டுக்கு ஊர்களுக்குப் போவதில் பயணிகளுக்கு மிகப் பெரியஅ ளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அனைவரும் அழாத குறையாக பஸ்களைத் தேடி பரிதவித்துக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 11வது ஊதிய குழு ஒப்பந்தம் கடந்த 2013 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. 12 ஆவது ஊதிய குழு ஒப்பந்தம் செப்டம்பர் 2013 ஆம் முதல் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு அதற்கான பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட 11 சங்கங்கள் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்திருந்தன. ஆனால் அறிவித்த நாளுக்கு முந்தைய நாளே போராட்டம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 80 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த போரட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டத்தை வலுவிழக்க செய்ய போக்குவரத்து துறை அதிகாரிகளும், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும் ஏற்கனவே கூடி பேசி நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதன்படி நெல்லை, தூத்துக்குடி மண்டலங்களில் யாருக்கும் விடுமுறை வழங்கப்படவில்லை. மேலும் ஸ்பெஷல் டூட்டு என அனைவரும் அழைக்கப்பட்டனர். ஒரு சில இடங்களில் தற்காலிக பணியாளர்களும் களம் இறங்கினர்.
இதனால் பல பகுதிகளில் வழக்கம் போல் பஸ் போக்குவரத்து நடைபெற்றது. நெல்லை பகுதியில் தாமிரபரணி, பைபாஸ் பணிமனை, கேடிசிநகர், வள்ளியூர், விளாத்திகுளம், கோவில்பட்டி, சங்கரன்கோவில், திசையன்விளை உள்பட 16 பணிமனைகள் உள்ளன.
இவற்றில் இருந்து 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் உள்ள 642 பஸ்களில் 421 பஸ்கள் வழக்கம் போல் ஓடின. இந்த போராட்டம் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலர் வேலைக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமலும், பலர் மருத்துவமனை இன்ன பிற வேலைகளுக்க செல்லமுடியாமலும் தவியாய் தவித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் தற்காலிக பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து உடனடியாக பஸ்களை இயக்கி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications