ஏற்காடு தொகுதியில் ரூ.10 லட்சம் வெள்ளிப் பொருட்கள், ரூ.3.74 லட்சம் ரொக்கம் பறிமுதல்
சேலம்: இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் ஏற்காடு தொகுதியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ. 3.74 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்காடு தொகுதிக்கு வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையடுத்து அநத் தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. தொகுதியில் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் வாழப்பாடி அருகே இருக்கும் பேளூர் பிரிவு ரோட்டில் நேற்று இரவு 7 மணிக்கு ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி ஒரு கார் சென்றது. அதை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களும், ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 930 ரொக்கமும் இருந்தது.
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போன்று ஆத்தூரில் இருந்து வாழப்பாடிக்கு சென்ற கார் ஒன்றை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிட்டதில் அதில் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரத்து 340 ரொக்கம் இருந்தது. இந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications