Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய ஆணையம் தயங்குவது ஏன்? ராமதாஸ் கேள்வி

ஓட்டுக்கு பணம் கொடுத் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் தயங்குவது ஏன் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணப்பட்டுவாடா புகாரில் சிக்கியுள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் தயங்குவது என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வாரி இறைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அத்தொகுதியில் நாளை மறுநாள் நடைபெறவிருந்த இடைத்தேர்தலை ஆணையம் ரத்து செய்திருக்கிறது.

எனினும், வாக்காளர்களுக்கு பணமும், பரிசுகளும் வழங்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படாதது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. இடைத்தேர்தலை ரத்து செய்துவிட்டு இன்னொரு நாளில் நடத்துவதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.

28 பக்க அறிக்கை

28 பக்க அறிக்கை

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள 28 பக்க ஆணையில், தொகுதி முழுவதும் எப்படியெல்லாம் பணம் வினியோகிக்கப்பட்டது என்பது குறித்து வேதனையுடன் விளக்கப்பட்டிருக்கிறது. ‘‘ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்தனர் என்று புகார்கள் வந்தன. இத்தகவல் வருமானவரித்துறையுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

89 கோடி

89 கோடி

அதனடிப்படையில் விஜயபாஸ்கருடன் தொடர்புடைய 32 இடங்களில் வருமானவரி ஆய்வு நடத்தப்பட்டது. அதில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக கட்சியின் பல்வேறு தலைவர்களிடம் ரூ.89 கோடி வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் விஜயபாஸ்கரின் கணக்காளர் சீனிவாசனிடமிருந்து கைப்பற்றப்பட்டன. வட்ட வாரியாக, வாக்காளர் வாரியாக வழங்கப்பட வேண்டிய பணம் குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் விஜயபாஸ்கரின் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன'' என்று ஆணையம் கூறியுள்ளது.

பண விநியோகம்

பண விநியோகம்

அதிமுகவின் இரு அணிகளையும் சேர்ந்தவர்கள் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பல இடங்களில் வினியோகித்ததாகவும், பெரும்பாலான இடங்களில் அவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிமுகவினர் பண வினியோகம் செய்து முடித்த பின்னர் திமுக சார்பில் ஓட்டுக்கு ரூ.2000 வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் மீது நடவடிக்கை

வேட்பாளர்கள் மீது நடவடிக்கை

தேர்தல் ஆணைய அறிக்கையில் இதுபற்றி குறிப்பிடப்பட வில்லை என்றாலும் இது ஊரறிந்த உண்மையாகும். வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்பட்டதாக தேர்தலை ஒத்திவைத்த ஆணையம், அதற்குக் காரணமான அரசியல்கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி எழுப்ப விரும்பும் வினாவாகும்.

கெஞ்சக் கூடாது

கெஞ்சக் கூடாது

பணம் வினியோகித்தோர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என்று கூறி தேர்தல் ஆணையம் தப்பித்துக் கொள்ள முடியாது. எம்.எஸ்.கில் தலைமைத் தேர்தல் ஆணையர் இடையிலான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,‘‘ சுதந்திரமான, நேர்மையான தேர்தல்கள் நடத்தப்படுவது மிக முக்கியமாகும். இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவு கடலளவு அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. சில தருணங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டம் இல்லாத நிலையில், மோசமான சூழலை சமாளிக்க வேண்டுமானால், அதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் தமது கடமையை செய்வதற்கு அனுமதிக்கும்படி இறைவனிடம் கையேந்தவோ அல்லது தமக்கு அதிகாரமளிக்கும்படி வெளிசக்திகளிடம் கெஞ்சவோ கூடாது.

தகுதி நீக்கம்

தகுதி நீக்கம்

324 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என ஆணையிட்டுள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் தஞ்சை, அரவக்குறிச்சி பொதுத்தேர்தலையும், இப்போது இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலையும் ஆணையம் ரத்து செய்தது. அவ்வாறு இருக்கும்போது அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்களையும், அவர்களின் கட்சிகளையும் தகுதி நீக்கம் செய்ய ஆணையம் தயங்குவது ஏன்?

அவலம்

அவலம்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் இதே நிலை ஏற்பட்ட போது, ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. அப்போது அக்கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால் இப்போது இராதாகிருஷ்ணன் நகரில் இந்த அவலம் ஏற்பட்டிருக்காது.

புதுப்புது வழிகள்

புதுப்புது வழிகள்

வாக்காளர்களுக்கு கையூட்டு வழங்க அரசியல் கட்சிகள் புதுமையான வழிமுறைகளை புகுத்துவது குறித்தும் தேர்தல் ஆணையம் வேதனை தெரிவித்துள்ளது. ‘‘பிரச்சாரங்களின்போது சட்டவிரோதமாக பணம் செலவழிக்கப்படுவதை தடுப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளை ஏமாற்றும் வகையில் அரசியல்கட்சிகளும், அவற்றின் தலைமைகளும் கடைபிடிக்கும் புதுமையான வழிமுறைகள் கடுமையான முறையில் ஒடுக்கப்படவேண்டும். இதுபோன்ற செயல்கள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி தலைமைகள் ஒதுங்கிவிட முடியாது.

ஜனநாயகம்

ஜனநாயகம்

இத்தகைய செயல்களுக்கு கட்சித்தலைமைகள் வெளிப்படையான அனுமதி தராவிட்டாலும், மறைமுகமான ஒப்புதல் அளிப்பதை மறுக்க முடியாது. ஜனநாயகம் ஆழமாக வேரூன்றி பூத்துக்குலுங்க வேண்டுமானால் தவறு செய்யும் தங்கள் கட்சி வேட்பாளர்களை கட்டுப்படுத்த தங்களின் தார்மீக நெறிசார்ந்த ஆதிக்கத்தையும், சட்ட அதிகாரத்தையும் கட்சித் தலைமைகள் பயன்படுத்த இதுவே சரியான நேரம் ஆகும்'' என்று தேர்தல் ஆணையம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெட்கம்

வெட்கம்

தேர்தல் ஆணையம் இந்த அளவு வேதனைப்படுவதற்கும், வேண்டுகோள் விடுக்கவும் அதிமுகவின் இரு அணிகளும், திமுகவும் தான் காரணம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இவற்றின் கடந்த கால செயல்பாடுகளே இதற்கு உதாரணம் ஆகும். இப்படி ஒரு நிலைமையை ஏற்படுத்தியதற்காக அதிமுகவின் இரு அணிகள் மற்றும் திமுக தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழகத்தில் ஜனநாயகத்தை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த பழி இந்தக் கட்சிகளையே சாரும்.

கண்டனம்

கண்டனம்

ஆணையம் இப்போது விடுத்த வேண்டுகோளை பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக விடுத்து வருகிறது. அதை ஜனநாயகப் படுகொலை செய்யும் திராவிடக் கட்சிகள் கண்டுகொள்ளாததுடன், அதற்கு செயல் வடிவம் கொடுக்க தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+