மள்ளர் நாடு அமைப்பின் செயலாளர் படுகொலை- பதற்றம்; போலீஸ் தடியடி
நெல்லை: நெல்லை அருகே மள்ளர் நாடு அமைப்பின் செயலாளர் மகேஷ் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை அருகே உள்ளது கொம்மந்தனூர் கிராமம். இவ்வூரை சேர்ந்தவர் மகேஷ். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருணம் செய்து கொண்டார். இவர் மள்ளர் நாடு என்ற ஆமைப்பின் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
இவரது அமைப்பின் சார்பில் அவ்வப்போது போராட்டமும் நடத்தி வந்தார். இதன் காரணமாக இவருக்கும், பல்வேறு தரப்பை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மாலை மகேஷ் வீட்டில் இருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய அவரது நண்பர் ஒருவர் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக பேச வேண்டும் என அழைத்துள்ளார். மேலும் ஒரு நிலத்தை முடிந்து கொடுத்தால் அதில் அதிக அளவு கமிஷன் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மகேஷ் உடனே பைக்கில் பாளையங்கோட்டை புறப்பட்டார். அவரது வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்று கொண்டிருந்த போது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சராமரியாக வெட்டியது.
இதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெல்லை சரக 'டிஐஜி சுமித் சரண் விசாரணை நடத்தினார்.
மகேஷ் கொலையை அடுத்து நெல்லையிலிருந்து கீழப்பாட்டத்திற்கு வந்த தனியார் பஸ் மற்றும் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனம் மீது சிலர் கல் வீசி தாக்கினர். இதையடுத்து அங்கு விரைந்த வந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.
தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேர பஸ்கள் அனைத்தும் உடனடியாக அந்த வழியாக செல்லாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications