காவிரி போராட்ட எதிரொலி: சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் லூப் சாலை மூடல்
காவிரி போராட்ட எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரை மற்றும் பட்டினப்பாக்கத்தில் உள்ள லூப் சாலை மூடப்பட்டுள்ளது.
சென்னை: காவிரி மேலாண்மை வாரிய்ம அமைக்க கோரி நேற்று இளைஞர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து சென்னை மெரினா கடற்கரை மூடப்பட்டது. அதே போல் பட்டினப்பாக்கம் லூப் சாலையும் மூடப்பட்டது.
காவிரி நதி நீர் பங்கீட்டுக்காக திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இந்நிலையில் நீதிமன்றம் விதித்த கெடுவும் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டது. சென்னை மெரினா, பெசன்ட் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கடற்கரையை மூடினர்
இதனிடையே ஜல்லிக்கட்டுக்காக போராடியதை போல் நீருக்காக போராட வேண்டும் என்று சமூகவலைதளங்களில் தகவல் பரவியுள்ளதை அடுத்து சென்னை மெரினா கடற்கரையை போலீஸார் மூடினர்.

அனுமதியில்லை
வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடற்கரைக்குள் நுழைய போலீஸ் அனுமதிக்கவில்லை.
சர்வீஸ் சாலை முழுவதும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி செய்ய அனுமதி தரப்படவில்லை.

மீன் வியாபாரம்
கடற்கரை சாலையில் உள்ள நடைபாதையில் மட்டுமே நடைபயிற்சி செய்ய அனுமதி அளித்துள்ளனர். மேலும் பட்டினப்பாக்கம் லூப் சாலையும் மூடப்பட்டுவிட்டது. இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் வியாபாரம் காலை 5.30 மணிக்கு தொடங்கிவிடும்.

பட்டினப்பாக்கம் லூப் சாலை
இங்கு ஏராளமானோர் மீன் வாங்க வருவர். இதை சாக்காக வைத்துக் கொண்டு போராட்டம் நடத்த கூடும் என்பதால் இந்த சாலையும் மூடப்பட்டது. இதனால் மீன் வியாபாரம் நடைபெறவில்லை. மீனவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications