காவிரிக்காக நாளை முழு அடைப்பு வெற்றி பெற கை கோர்ப்போம் - ஸ்டாலின்
தமிழர்களின் உணர்வை, நாட்டுக்கு உணர்த்தும் நாளைய முழு அடைப்பு, முழு வெற்றி பெறட்டும் என்று ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: டெல்லியின் வஞ்சகத்துக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்டுள்ள தமிழர்களின் உணர்வை, நாட்டுக்கு உணர்த்தும் நாளைய முழு அடைப்பு, முழு வெற்றி பெறட்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எதிர்கட்சியினர் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளை அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். முழு கடை அடைப்பும் நடக்கிறது. பேருந்துகளை இயக்க மாட்டோம் என்று தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ள நிலையிலும் பலத்த பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.
6ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் அரசு தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. பொதுத்தேர்வுகளும் நடைபெற்று வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சமாளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விடுமுறை எடுக்காமல் அனைவரும் நாளை பணியில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தீவிரமாகி வரும் நிலையில் முழு அடைப்பின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதில் காவல்துறையினர் கவனமுடன் உள்ளனர். இதற்காக 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
காவிரி உரிமையை நிலைநாட்ட உணர்ச்சிமிக்க போராட்டம் நடத்திவரும் ஒவ்வொருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. தில்லியின் வஞ்சகத்துக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்டுள்ள தமிழர்களின் உணர்வை, நாட்டுக்கு உணர்த்தும் நாளைய முழு அடைப்பு, முழு வெற்றி பெறட்டும். அனைவரும் கை கோர்ப்போம், களம் காண்போம்!
— M.K.Stalin (@mkstalin) April 4, 2018
இதனிடையே எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பந்த் பற்றி பதிவிட்டுள்ளார். காவிரி உரிமையை நிலைநாட்ட உணர்ச்சிமிக்க போராட்டம் நடத்தி வரும் ஒவ்வொருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. டெல்லியின் வஞ்சகத்துக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்டுள்ள தமிழர்களின் உணர்வை, நாட்டுக்கு உணர்த்தும் நாளைய முழு அடைப்பு, முழு வெற்றி பெறட்டும். அனைவரும் கை கோர்ப்போம், களம் காண்போம்!
என்று குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications