காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தம் ரத்தாகிறது.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. டி.கே. ரங்கராஜன் இன்று மீத்தேன் வாயு எடுப்பதற்கு அளிக்கப்பட்ட உத்தரவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை மனு காவேரி டெல்டா விவசாயிகள் சங்கத்திடமிருந்து அரசுக்கு கிடைத்துள்ளதா? அப்படி கிடைத்திருந்தால் அதன் மீது அரசின் நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்து கூறியதாவது:
காவிரி டெல்டாவில் உத்தேசிக்கப்பட்டுள்ள மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் குறித்து தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிரதமருக்கு எழுதப்பட்ட முறையீடு தமிழ்நாடு ஆளுநரின் செயலாளர் மூலம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் பெறப்பட்டுள்ளது.
கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிட்டெட் நிறுவனத்தினருக்கு மீத்தேன் எடுப்பதற்கு தமிழ்நாட்டில் மன்னார்குடி ஏரியாவில் 667 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அனுமதியளிக்கப்பட்டது.
இந் நிறுவனம் தேவையான ஆவணங்களை இதுநாள் வரை சமர்ப்பிக்கவில்லை. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் நினைவூட்டப்பட்ட பிறகும் அந்நிறுவனம் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை.
இதற்கான காலம் 3.11.2013 அன்றோடு முடிந்துவிட்டது. ஒப்பந்தக்காரர் இந்தப் பகுதியில் மீத்தேன் எடுக்கும் நடவடிக்கைகளையும் தொடங்கவில்லை.
ஒப்பந்த ஷரத்துகளின்படி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications