குற்றாலத்தில் சுற்றுலாப் பயணியிடம் தங்க செயின் பறித்த இளைஞர் கைது
நெல்லை: குற்றாலஅருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் சுற்றுலாப் பயணியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல அருவிகள் உள்ளன. அதில் குற்றாலம் மலைப்பகுதியில் உள்ள அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீசன். தற்போது சீசன் காலம் முடியும் நிலையில் உள்ளது.

குறைவாக தண்ணீர் விழுந்தாலும் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் விடுமுறை தினம் என்பதால் நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் விருத்தாசலத்தை சேர்ந்த தபால் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்த் யுவராஜ் என்பவர் குடும்பத்தோடு குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை யாரோ பறித்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட அவர் வெளியே வந்து சப்தம் போட்டுள்ளார்.
அப்போது ஒரு இளைஞர் ஓடியுள்ளார். அவரை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து சென்று பிடித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில் பாக்கெட்டில் தங்க செயின் இருப்பது தெரியவந்தது.

பின்னர் உடனடியாக அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பா என்பவரது மகன் முனியசாமி என்பது தெரியவந்தது. அவரை காவல் ஆய்வாளர் ஜமால் கைது செய்து அவரிடமிருந்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications