அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மாரடைப்பு!
அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு மாரடைப்பு
சென்னை: அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பல்லோ குழுமத்தின் தலைவர் பிரதாப் சி ரெட்டி. இவருக்கு நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவருக்கு இதய அடைப்புக்கான ஆஞ்சியோ செய்யப்பட்டது. மருத்துவப் பரிசோதனை முடிந்ததை அடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பல்லோவில் முக்கிய பிரமுகர்களுக்கான வார்டில் பிரதாப்புக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜெயலலிதாவும் கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications