முதல் முறையாக லண்டன் கார்ப்பரேஷன் கவுன்சிலரானார் சென்னைப் பெண்

சென்னையில் பிறந்து வளர்ந்து லண்டனில் செட்டிலான பெண் ரெஹேனா அமீர், லண்டன் கர்ப்பரேஷனில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்று சாதனை படைத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பிறந்து வளர்ந்து லண்டனில் செட்டிலான பெண் ரெஹேனா அமீர், லண்டன் கர்ப்பரேஷனில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்று சாதனை படைத்துள்ளார்.

சென்னையில் பிறந்தவர் ரெஹேனா அமீர். 43 வயதான இவர் லண்டன்வாழ் தொழிலதிபராவார். லண்டனில் உள்ள விண்ட்ரி வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றுள்ளார் ரெஹேனா அமீர்.

Chennai born woman elected to City of London corporation

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள ரெஹேனா, " எனது முழுக்க கவனமும் சாலைப் பாதுகாப்பு, மாசில்லா தூய்மையான காற்று, மன நலம், எல்லாவற்றிலும் சிறந்த பிரதிநிதித்துவம் ஆகியவற்றில்தான் உள்ளது. இவற்றை மையப்படுத்தியே எனது மக்கள் சேவை தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.

லண்டன் கார்ப்பரேஷன்தான் இங்கிலாந்து நாட்டின் மிகப்பெரிய அதிகாரம் படைத்த நகர நிர்வாகம் ஆகும். இந்த கார்பரேஷனில் 1.3 பில்லியன் பவுண்ட்ஸ் நிதி உள்ளது குறிப்பிடத்தக்கது. லண்டன் கார்ப்பரேஷன் 25 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையில் சேர்ந்த பெண் இடம்பிடித்துள்ளது இந்தியாவுக்குப் பெருமையளிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+