பிரசாரத்தைத் தொடங்குகிறார் ஜெ... வெள்ளம் பாதித்த சென்னையிலிருந்து... இன்று மாலை!
சென்னை: அதிமுக வேட்பாளர்களை அறிவித்த கையோடு இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்வர் ஜெயலலிதா. கடந்த தேர்தலை விட மிகக் குறைந்த இடங்களில்தான் அவர் பேசப் போகிறார் என்றாலும் கூட "மேக்ஸிமம்" மக்களைக் கவரும் வகையில் அவரது பிரசாரத் திட்டம் வகுக்கப்படடுள்ளதாம்.
இன்று சென்னை தீவுத் திடலில் தனது முதல் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகிறார். அப்போது சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வாக்கு சேகரிப்பார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக, பாமக என கட்சிகள் பிளவுபட்டு நிற்கின்றன. இந்த நிலையில் அதிரடியாக 234 தொகுதிகளையும் பங்கீடு செய்து அதில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்றும் மீதமுள்ள 7 தொகுதிகளில் இரட்டை இலையில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் என்றும் அறிவித்து அனைத்துக் கட்சிகளையும் அதிர வைத்தார் ஜெயலலிதா.

இன்று முதல் பிரசாரம்
தற்போது வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு விட்ட ஜெயலலிதா இன்று முதல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். மே 12ம் தேதி வரை அவர் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

14 இடங்களில்...15 நாள் பிரசாரம்
14 நகரங்களில் அவர் 15 நாட்கள் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கவுள்ளார். சென்னையில் தொடங்கும் அவர் விருத்தாச்சலம், தர்மபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, மதுரை, கோவை, விழுப்புரம், பெருந்துறை, தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் பேசவுள்ளார்.

புதுச்சேரியில் 26ம் தேதி
இடையில் வருகிற 26ம் தேதி புதுச்சேரி செல்லும் ஜெயலலிதா அங்கு 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பார்.

விமானம்- ஹெலிகாப்டர் - வேன்
ஒவ்வொரு ஊருக்கும் விமானம் அல்லது ஹெலிகாப்டரில் ஜெயலலிதா செல்லவுள்ளார். பின்னர் வேன் மூலம் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அவர் பயணிப்பார். ஒவ்வொரு ஊர்ப் பிரசாரத்தையும முடித்த பின்னர் சென்னை திரும்பி விடுவார் ஜெயலலிதா.

இன்று தீவுத் திடலில்
இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா சென்னை தீவுத் திடலில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக பிரமாண்ட மேடை போடப்பட்டுள்ளது. சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட வேட்பாளர்களை இதில் அவர் அறிமுகப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி ஒளிபரப்பு
ஜெயலலிதாவின் பேச்சை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் இதற்காக பிரத்யேக வேன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனவாம்.

தேர்தல் அறிக்கை
சென்னையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையையும் ஜெயலலிதா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதிமுகவினர் மத்தியில் உற்சாகம் காணப்படுகிறது.

புது ரோடு
ஜெயலலிதா பிரசாரக் கூட்டத்திற்காக தீவுத் திடல் நுழைவாயிலிலிருந்து மேடை வரைக்கும் புதிதாக தார் ரோடு போட்டு்ள்ளனர். அந்த ஏரியாவே சுத்தப்படுத்தப்பட்டு பளிச்சென மாறியுள்ளது.

கடைகளை கலைத்த அதிகாரிகள்
ஜெயலலிதா பிரசாரக் கூட்டத்தைத் தொடர்ந்து தீவுத் திடல் மைதானத்தில் ஒப்பந்த அடிப்படையில் போட்டு வைத்திருந்த கடைகளை முன்னறிவிப்பில்லாமல் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி விட்டனராம்.

பொருட்காட்சி
தீவுத் திடலில் வருடம் தோறும் பொருட்காட்சி நடைபெறும். இதற்காக டெண்டர் விட்டு கடைகள் ஒதுக்கப்படும். இந்த ஒப்பந்தப்படி அமைக்கப்பட்டிருந்த கடைகளுக்கான காலம் மார்ச் 23ம் தேதியோடு முடிந்தது. இருப்பினும் கடைகளை அகற்ற 40 நாள் அவகாசம் உண்டு. அந்த அவகாசம் இன்னும் முடியாத நிலையில் கடைகளை இரவோடு இரவாக அதிகாரிகள் அகற்றி விட்டனர்.

அதிகார துஷ்பிரயோகம்
கடைகளை முன்னறிவிப்பின்றி அகற்றுவதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதிமுக பிரச்சாரக் கூட்டம் நடைபெறுவதாலயே அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் வியாபாரிகள் குமுறியுள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications