அதிமுக வங்கி கணக்குகளை சசி, தினகரன் பார்வையிடலாம்.. ஹைகோர்ட் அனுமதி
அதிமுக வங்கிக் கணக்குகளை சசிகலா மற்றும் தினகரன் பார்வையிடலாம் என சென்னை ஹைகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
சென்னை: அதிமுக வங்கிக் கணக்குகளை சசிகலாவும் தினகரனும் பார்வையிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டபோது அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமித்துவிட்டு சென்றார்.

இரு அணிகளாக பிளந்த அதிமுக இணைந்தபோது சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிராக முடிவுகள் எடுக்கப்பட்டது. அதேபோல் அதிமுக சார்பில் பொதுக் குழு கூட்டத்தில் சசிகலா வகித்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினகரனுக்கு எதிராகவும் அதிமுக தீர்மானம் நிறைவேற்றியது, இந்த தீர்மானங்கள் ரத்து செய்யக் கோரியும் அதிமுகவின் வங்கிக் கணக்குகளை பார்வையிட அனுமதி கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலாவும், தினகரனும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து அதிமுக தலைமை கழகத்தின் மேலாளர் மகாலிங்கம் கொடுத்த சீலிடப்பட்ட, மைலாப்பூர் கரூர் வைஸ்யா வங்கி, இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ஆகிய கிளைகளில் உள்ள அதிமுகவின் வங்கி கணக்குகளை சசிகலா, தினகரன் ஆகியோர் தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் பார்வையிடலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணை பின்னர் டிசம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications