"டாஸ்மாக்" சரக்கில் நச்சுத் தன்மையா?.. ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...
சென்னை: டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களில் நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதன்மை பெஞ்ச் விசாரித்தது.

அப்போது, அரசுக்கு பல கோடி வருமானத்தை டாஸ்மாக் வழங்கி வருகிறது. இன்று தமிழக மக்கள் பலரும் மது குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். மது குடிப்பதன் மூலம் மக்கள் உடல் நலம் எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். இதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுதாரர் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் டாஸ்மாக் மதுபானங்களில் நச்சுத்தன்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஆராய வேண்டும் என்றும், இந்த ஆய்வை டாஸ்மாக் நிறுவனேமே நடத்தி ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
-
ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications