ஓ.பி.எஸ் கையை வெட்டுவேன் என்று மிரட்டிய வி.பி. கலைராஜனுக்கு முன்ஜாமீன்
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை கையை வெட்டுவேன் என்று மிரட்டிய வி.பி. கலைராஜனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கையை வெட்டுவேன் என்று கூறியது தொடர்பான புகாரில் சசிகலா ஆதரவாளரான வி.பி. கலைராஜனுக்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக இரண்டாக பிளவு பட்டது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தலைமையில் ஒரு பிரிவினரும், சசிகலா தலைமையில் மற்றொரு பிரிவினரும் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவை கைப்பற்ற நினைத்தால் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை வெட்டுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார் சசிகலா ஆதரவு முன்னாள் எம்எல்ஏவான கலைராஜன். அவரது இந்தப் பேச்சு தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுதொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மாணவர் அணி இணை செயலாளரும் ஐகோர்ட் வழக்கறிஞருமான செல்லபாண்டியன் வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் கலைராஜன் மீது கொலை மிரட்டல் , பொது மக்கள் மத்தியில் பகிரங்கமாக கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், விரைவில் கலைராஜனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், தன்னை கைது செய்துவிடக் கூடாது என்பதற்காக கலைராஜன் தரப்பில் முன்ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் வி.பி. கலைராஜனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications