அண்ணா நூலகத்தை சீரமைக்க தமிழக அரசுக்கு 4 வாரம் கெடு.. ஹைகோர்ட் அதிரடி

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணாநூலகத்தை நான்கு வாரத்தில் சீரமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தை நான்கு வாரத்தில் சீரமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வர்தா புயலால் அண்ணா நூலகம் மேலும் பாதிக்கப்பட்டு உள்ளதாக வழக்கு விசாரணையின் போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற பேராசிரியர் மனோன்மணியம் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் கட்டப்பட்டது.

Chennai High court set dead line for tamilnadu govt to renewal anna library

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த நூலகம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த 2011 ஆ-ம் ஆண்டு முதல் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அபபோது வர்தா புயலால் அண்ணா நூலகம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் நான்கு வாரத்துக்குள் அண்ணா நூலகத்தை சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+