வேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்?
Recommended Video

சென்னை: வேலூர், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
வேலூரில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துவருகிறது. ஆம்பூரில் கானாற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியுள்ளது.

2 நாட்களுக்கு
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

13 மாவட்டங்கள்
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். 2 நாட்களுக்கு மிதமான மழை தொடரும். வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், நாகை, அரியலூர், திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னை வானிலை மையம்
வேலூர் மாவட்டத்தில் ஆலங்காயத்தில் அதிகபட்சமாக 15 செ.மீ. பதிவாகியுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு காலை, இரவில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கல்லூரிகளுக்கு...
இன்று பள்ளிகள் வழக்கம் போல் விடுமுறை என்பதால் பெரும்பாலும் சென்னையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. சாதாரண நாட்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நிலையில் நாளையும் மழை பெய்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தால் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது எப்படி என கவலையில் உள்ளனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications