கிளாசில் மது.. சியர்ஸ் சொல்லி உள்ளே கவிழ்க்கும் இளம் பெண்.. வாட்ஸ்அப்பில் பரவும் பரபரப்பு வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண் நண்பர்களுடன் அமர்ந்து இளம் பெண் ஒருவர் போட்டி போட்டு மது அருந்தும் காட்சி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மது பழக்கத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுவன் ஒருவனுக்கு அவனது உறவினர் ஒருவரே மது ஊற்றிக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

whatsapp

இந்த சம்பவம் வாட்ஸ்அப் மூலம் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து மற்றொரு சிறுவனுக்கு சில இளைஞர்கள் மது ஊற்றி கொடுத்த சம்பவமும் வாட்ஸ்அப்பில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து கோவையில் பள்ளி மாணவி ஒருவர் காதல் தோல்வியில் மது அருந்தி சாலையில் சரிந்து கிடந்தது, பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் மது அருந்தியது, உள்ளிட்ட காட்சிகள் மது விலக்கை மீண்டும் அமல்படுத்துவதற்கான போராட்டத்தை தூண்டி வருகிறது.

இந்நிலையில், திருச்சி கல்லூரி மாணவி ஒருவர் அவரது ஆண் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தும் வீடியோ காட்சி வாட்ஸ்அப்பில் பரவி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 18 வினாடிகள் ஓடும் அந்த காட்சியில், இளைஞர்கள் சிலர் சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை சூழ்ந்து நிற்கின்றனர்.

மது அருந்தும் இளம் பெண் அருகே மேலும் ஒரு பெண் படுத்து கிடக்கிறார். சில இளைஞர்கள் கீழே அமர்ந்திருந்து மது அருந்துகின்றனர். சம்பந்தப்பட்ட பெண் நாற்காலியில் அமர்ந்திருக்க அவரை மது அருந்துமாறு இளைஞர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.

பின்னர் அந்த பெண் ஏதோ சாதனை செய்வது போல் கிளாசை வாங்கி அப்படியே வாயில் சரிக்கிறார்.

அப்போது, இளைஞர் ஒருவர் "டேய் இவள் பரம்பரை குடிகாரியைபோல் குடிக்கிறாள்" என்று கிண்டல் செய்கிறார். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் சம்பந்தப்பட்ட பெண் மது குடிப்பதில் பிசியாக இருக்கிறார்.

இளைஞர்களுக்கு அந்த பெண் சியர்ஸ் சொல்லி டம்ளரில் இருக்கும் மதுவை காலி செய்வது போல் காட்சி முடிகிறது. சம்பந்தப்பட்ட பெண் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவியாக இருக்கலாம் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+