பஸ் எல்லாம் ஒழுங்கா போகுதா.. களம் இறங்கிய சேலம் கலெக்டர் ரோகினி!
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு செய்து பேருந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்.
Recommended Video

சேலம்: பஸ் சரியா கிடைக்குதா? ஏதாவது சிரமம் இருக்கிறதா என்று பயணிகளிடம் கேட்டறிந்தார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி.
சேலத்தில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளதாக ரோகிணி தெரிவித்தார்.சேலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஆட்சியர் ரோகிணி கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கட்டணமின்றி தனியார் ஐடி நிறுவன பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தாம்பரம், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

ஆட்சியர் ரோகிணி ஆய்வு
சேலத்தில் குறைவான அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் ரோகினி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். மேலும் பேருந்துகள் சரியாக இயக்கப்படுகிறதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

பேருந்துகள் ஓடுகின்றன
செய்தியாளர்களிடம் பேசிய அவர் சேலத்தில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளதாக ரோகிணி தெரிவித்தார்.சேலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் 86 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் தற்போது இயங்கிக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.

தயார் நிலை
சேலத்தில் மாற்று நடவடிக்கையாக 200 ஓட்டுனர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். அதிக கட்டணம் வாங்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளியூர் பேருந்துகள்
வெளியூர் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பிற்பகலுக்கு மேல் 100 சதவீதம் பேருந்துகள் சேலம் மாவட்டத்தில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 சதவிகித பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் சேலத்தில் 100 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications