தஞ்சை தொகுதி மக்களுக்கு நன்றி.. அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பேட்டி
தஞ்சை தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ரங்கசாமி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தஞ்சை: தஞ்சைத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக சார்பில் போட்டியிட்ட ரங்கசாமி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தொகுதியில் உள்ள அடிப்படைப் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வுகள் எட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் கடுமையாக எழுந்ததையடுத்து, தஞ்சைத் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் ரங்கசாமியும் திமுக சார்பில் அஞ்சுகம் பூபதியும் போட்டியிட்டனர்.

இந்தத் தொகுதியில் கடந்த 19ந் தேதி பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. 19 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 99,362 வாக்குகள் பெற்று 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் ரங்கசாமி பேசியதாவது:
என்னை வெற்றி பெற வைத்த தஞ்சைத் தொகுதி மக்களுக்கு நன்றிகள். முதல்வர் அறிவித்த அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவர் செய்த சாதனைக்கே இந்த வெற்றி கிடைத்துள்ளது. இந்தத் தொகுதியில் உள்ள உடனடி பிரச்சனையாக உள்ள குடிநீர் பிரச்சனையை முதல்வரிடம் சொல்லி தீர்த்து வைப்பேன். மேலும், அடிப்படை வசதிகள், பூச்சந்தைப் பணிகளை நிறைவேற்றுவேன் என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications