காவிரி: பாஜகவின் பச்சை துரோகத்துக்கு சற்றும் குறைந்ததில்லை காங்.கின் கள்ள மவுனம்!
காவிரி விவகாரத்தில் பாஜகவை போல காங்கிரஸும் கபட நாடகமாடி தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறது.
Recommended Video

சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில் பாஜகவின் பச்சை துரோகத்துக்கு சற்றும் குறைந்தது இல்லை காங்கிரஸ் கட்சியின் கள்ள மவுனம்.
தமிழகத்தை சுடுகாடாக்கியே தீருவது என்பதில் பாஜக பஞ்சகச்சத்தை கட்டிக் கொண்டு அலைகிறது. காவிரி நதிநீர் விவகாரத்தில் துரோகத்துக்கு மேல் துரோகம் செய்கிறது பாஜகவின் மத்திய அரசு.

தமிழக பாஜகவினரோ பொதுவெளியிலேயே இந்த பச்சை துரோகத்துக்கு சப்பைக் கட்டு கட்டிக் கொண்டு வலம் வருகின்றனர். எதற்கெடுத்தாலும் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்திலே.. என நீட்டி வசனம் பேசி வெறுப்பேற்றுகின்றனர்.
இன்னொரு பக்கம் காவிரிக்காக போராடுகிறோம் என்கிறது காங்கிரஸ். பாஜகவின் பச்சை துரோகத்தைவிட காங்கிரஸின் இந்த போராட்டம்தான் ஆகப் பெரும் அநீதியானது. நாங்க ரொம்ப நல்லவங்க என அத்தனை போராட்டத்திலும் தலை காட்டி விடுகின்றனர் காங்கிரஸ் கதர்கள்.
இவ்வளவு தூரம் காவிரி விவகாரம் பற்றி எரிகிறதே.. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒருவரேனும் டெல்லிக்கு சென்று காவிரி நீரை திறந்துவிட வேண்டும் அல்லது மேலாண்மை வாரியத்துக்கு ஒப்புதல் தர வேண்டும் என கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு அறிவுறுத்துங்க என மேலிடத்திடம் வலியுறுத்தவே இல்லை.
அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ட்விட்டரிலேயே சடுகுடு ஆடுகிறார். ஆனால் காவிரி பற்றி மட்டும் எதுவும் பேசமாட்டாராம்.. கர்நாடகாவில் தேர்தல் நடக்கிறதாம்..
உண்மையில் பாஜகவின் துரோகத்தைவிட காங்கிரஸின் இந்த கழுத்தறுப்புதான் படுமோசமானது. இதையும் தமிழகம் வன்மையாக கண்டிக்கும் போதுதான் தேசியத்துக்கு நமது வலி புரியும்.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications