அதிமுக- பாஜக "கலவரத்தின்" இடையே! செல்வப்பெருந்தகை- ராமதாஸ் சந்திப்பு! அப்போ விசிக?
திண்டிவனம்: திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஏன் நடந்தது என்பது குறித்து அவர் விளக்கமும் அளித்துள்ளார்.
பாமக ராமதாஸை அவரது தைலாபுரம் தோட்டத்தில் வைத்து காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். ஒருவேளை திமுக கூட்டணிக்கு பாமகவை அழைப்பதற்கான சந்திப்பாக இது இருக்கும் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில் ராமதாஸுடனான சந்திப்பு குறித்து செல்வப்பெருந்தகை கூறியதாவது: ராமதாஸை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். அவருடன் அரசியல் பேசவில்லை. கூட்டணி குறித்தும் ஆலோசிக்கவில்லை. தமிழகத்திற்கு தேவையான முடிவை ராமதாஸ் எடுப்பார்.
திமுக கூட்டணியில் பாமகவை சேர்ப்பது குறித்து முதல்வர்தான் முடிவெடுப்பார். பாமகவுக்குள் குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு பாஜகதான் காரணம். திமுக காரணம் என அன்புமணி புரிதலின்றி பேசுகிறார்.
கூட்டணி வைக்கும் கட்சிகளை ஸ்வாஹா செய்யும் வழக்கம் பாஜகவுக்கு உள்ளது. பாஜகவை சமாதானம் செய்ய வேண்டும் என்பதற்காகவே திமுகவை அன்புமணி விமர்சிக்கிறார். அண்ணா குறித்து வீடியோ வெளியிட்ட பாஜகவை இதுவரை அதிமுக விமர்சிக்காதது ஏன்? இதே எங்கள் கட்சித் தலைவர் குறித்து பேசியிருந்தால் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறியிருந்திருப்போம் என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications