எத்தனை நாள் ஒளிவாரு? கோர்ட்டு ஆர்டர் கிட்ட முடியாது.. குக் மாதம்பட்டி ரங்கராஜை சாடிய ஜாய் கிரிசில்டா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது, காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிரிசில்டா தொடர் குற்றச்சாட்டுகளை வீசி வருகிறார்.. ஜாய் பதிவிடும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒவ்வொன்றும் இணையவாசிகளின் கவனத்தை பெற்று வருகிறது.. அந்த வகையில் இப்போதும் ஒரு பரபரப்பு போஸ்ட் பதிவிட்டுள்ளார் ஜாய்.

பிரபல நடிகரும், காஸ்ட்லி சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், குறுகிய காலத்தில் மக்களிடம் பேசப்பட்டவர்.. தனது சமையல் திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர். குக் வித் கோமாளி' ஷோ மூலமும் எளிதில் பிரபலமானவர்..

ஜாய் கிரிசில்டா

ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகளால் சூழப்பட்டுள்ளது.. சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, ரங்கராஜ் மீது பரபரப்பு புகார்களை அடுக்கிய வண்ணம் உள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று, ரங்கராஜ் மீது புகார் அளித்தார். ரங்கராஜுடன் உறவு ஏற்பட்டு, அதன் விளைவாக தான் கர்ப்பமானதாகவும், பிறகு தன்னை ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாகவும் கூறி சோஷியல் மீடியாவை அதிர வைத்தார்.. போலீஸ் புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணையும் நடந்து வருகிறது.. நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு ரெடி

இதனிடையே ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைமாதம்பட்டி ரங்கராஜூடையதுதான் என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார்.. இதனை நிரூபிக்க டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு தயார் என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்து இருந்தார். ஆனால் இப்போது வரை டிஎன்ஏ பரிசோதனைக்கு ரங்கராஜ் வரவில்லை என்று ஜாய் தொடர்ச்சியாக குற்றம் சாட்டியபடி உள்ளார் ஜாய்.

அதேபோல அவ்வப்போது மாதம்பட்டியுடன் நெருக்கமாக உள்ள போட்டோக்களையும் ஜாய் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்..இதனால் ரங்கராஜன் இமேஜை டேமேஜ் ஆக்கி, தொடர்ந்து அவரை பற்றின பதிவுகளை பதிவிட்டு வருகிறார் ஜாய்.. இவரது பதிவுகள் அனைத்துமே இணையத்தில் எல்லாம் ட்ரோல் ஆகி வருகின்றன.. அந்தவகையில் இப்போதும் ஒரு பதிவு போட்டுள்ளார் ஜாய்.

கோர்ட்டு ஆர்டர்

இன்ஸ்டா ஸ்டோரியில், "டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் வந்தாரா என பலரும் மெசேஜ் செய்கிறார்கள். அவர் எப்படி வருவார். அறிக்கை தான் விடுவார். ஓடி ஒளிய தான் முடியும். கோர்ட்டு ஆர்டர் கிட்ட ஒளிய முடியாது. எத்தனை நாள் ஒளிவாரு. நேரம் வரும்’’ என தெரிவித்துள்ளார்.. ஜாய் பதிவிட்டுள்ள இந்த ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கையைதான், ஜாய் கிரிசில்டா இந்த பதிவில் வெளிப்படுத்தியுள்ளதாகவே கருதப்படுகிறது..

இதை பார்த்த பலரும் ஜாய்க்கு ஆதரவை தந்து வருகிறார்கள்.. மேலும் சிலர் சோஷியல் மீடியாவில் புலம்பி என்ன பிரயோஜனம்? சம்பந்தப்பட்ட நபரிடமே நேரில் சென்று கேட்கலாமே? குடும்பமாக உட்கார்ந்து பேசி முடிவெடுக்கலாமே" என்றும் அக்கறையுடன் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+